தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிப்பு


UPDATED : நவ 25, 2026 06:08 PM

ADDED : நவ 25, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:08 PM ADDED : நவ 25, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:

பெண் குழந்தைகளுக்கு மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்றலை உறுதி செய்யவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும் ஈடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும், 13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட, பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பெண் குழந்தை தினமான, ஜன., 24ல் சிறந்த ஒரு குழந்தைக்கு, பாராட்டு பத்திரத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. வரும், டிச., 31ம் தேதி படி, 13 வயதுக்கு மேல், 18 வயதுக்கு உட்பட்ட, தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தை மேற்கண்ட வீர, தீர செயல்களை புரிந்திருக்க வேண்டும்.

தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து, விண்ணப்பத்திற்கான விபரங்களை, அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், டிச., 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, பதிவு செய்த பின், 'புக் லெட்' தயாரித்து, தலா, இரண்டு நகல்களை, ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், 0423 –2443392 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us