/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில அரசின் மலையேற்ற வழித்தடங்கள்; கூடலுாரில் ஜீன்பூல், ஊசிமலை தேர்வு
/
மாநில அரசின் மலையேற்ற வழித்தடங்கள்; கூடலுாரில் ஜீன்பூல், ஊசிமலை தேர்வு
மாநில அரசின் மலையேற்ற வழித்தடங்கள்; கூடலுாரில் ஜீன்பூல், ஊசிமலை தேர்வு
மாநில அரசின் மலையேற்ற வழித்தடங்கள்; கூடலுாரில் ஜீன்பூல், ஊசிமலை தேர்வு
ADDED : அக் 25, 2024 09:42 PM

கூடலுார்: கூடலுாரில் மலையேற்றம் சென்றுவர ஜீன்பூல் தாவர மையம், ஊசிமலை வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தின், 14 மாவட்டங்களில், 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, தமிழக மலையேறும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையேறும் வழித்தடங்கள் தொடர்பாக 'டிஜிட்டல்' வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், மலையேற்றத்திற்கு செல்ல விரும்புவர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, வனத்துறையின் வழிகாட்டுதலுடன் சென்று வர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில், 10 மலையேற்ற வழித்தடகளின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கூடலுார் வனக்கோட்டத்தில், ஜீன்பூல் தாவர மையம், ஊசிமலை (கரியன்சோலை) தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதன்பதிவு அடிப்படையில், கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து, மலையேறும் வழித்தடத்துக்கு அழைத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களை, வனத்துறையினரால் நியமிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் அழைத்து செல்லவர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மலையேற்றம் செல்ல விரும்புபவர்கள், 'ஆன்லைன்' முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு செய்பவர்கள் வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிற்று கிழமை ஆகிய மூன்று நாட்கள் வழிகாட்டிகள் உதவியுடன், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் இருந்து, மலையேற்றத்துக்கு அழைத்து செல்லப்படுவர்.
இதற்காக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலையேற்றம் செல்பவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்,' என்றனர்.