ADDED : ஜன 05, 2026 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: மாநில கவர்னர் ரவி, ஊட்டியில் இருந்து நேற்று காலை சென்னை சென்றார்.
மாநில கவர்னர் ரவி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன், 5 நாட்கள் பயணமாக, டிச., 31ம் தேதி ஊட்டிக்கு வருகை தந்தார்.
ஊட்டியில் அமைந்துள்ள மக்கள் மாளிகையில் தங்கி இருந்த அவர், 2ம் தேதி சென்னை சென்று, 3ம் தேதி மீண்டும் ஊட்டிக்கு திரும்பினார். தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்வதாக இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை,11:00 மணிக்கு சென்னை புறப்பட்ட கவர்னரை, கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் நீலகிரி எஸ்.பி., நிஷா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கோத்தகிரி வழியாக, சாலை மார்க்கத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.

