UPDATED : அக் 25, 2026 04:56 PM
ADDED : அக் 25, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
கூடலூர்: கூடலூர், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பஸ் பஞ்சராகி நின்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வந்த அரசு பஸ், மதியம் 1:00 மணிக்கு, கூடலூர், விநாயகர் கோவில் அருகே ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கினர். தொடர்ந்து, புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி புறப்பட்ட, பஸ்சின் முன் டயர் பஞ்சராகி சாலையில் நின்றது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கூடலூர், கர்நாடகா, கேரளா செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடர்ந்து, கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து, பஞ்சரான டயரை மாற்றி 1:45 மணிக்கு பஸ்சை இயக்கி சென்றதை அடுத்து, போக்குவரத்து சீரானது.
