தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/உலக நடை தினத்தில் விநோத முயற்சி: 6 கி.மீ., பின்னோக்கி நடந்து அசத்தல்

உலக நடை தினத்தில் விநோத முயற்சி: 6 கி.மீ., பின்னோக்கி நடந்து அசத்தல்

உலக நடை தினத்தில் விநோத முயற்சி: 6 கி.மீ., பின்னோக்கி நடந்து அசத்தல்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: உலக நடை தினத்தை முன்னிட்டு, பாலக்காட்டை சேர்ந்த வங்கி மேலாளர், 6 கி.மீ., தூரத்தை பின்னோக்கியே நடந்து (ரிவர்ஸ் வாக்) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி மேலாளர் சஞ்சீவ், 51. வழக்கமாக நாள்தோறும் 3 கி.மீ முன்னோக்கியும், 3 கி.மீ பின்னோக்கியும் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

உலக நடை தினத்தை (அக். 4ம் தேதி) முன்னிட்டு, வழக்கத்திற்கு மாறாக, 6 கி.மீ., தூரத்தையும் பின்னோக்கியே நடந்துள்ளார். பொதுவாக, 6 கி.மீ முன்னோக்கி நடக்க 65 நிமிடங்கள் ஆகும் சூழலில், பின்னோக்கிய நடையை 85 நிமிடங்களில் கடந்துள்ளார்.

சஞ்சீவ் கூறியதாவது:

கடந்த ஏப். மாதம், 92.5 கிலோ எடையுடன் இருந்தேன். தீவிர உடற்பயிற்சிகள் ஏதுமின்றி நடைப்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு காரணமாக, மூன்றே மாதங்களில் 20 கிலோ எடையை குறைத்துள்ளேன்.

கடந்த, 20 ஆண்டுகளாக ரத்த அழுத்த பிரச்னைக்கு மாத்திரை உட்கொண்டு வந்தேன். தினமும் நடந்தால் மாத்திரையைக் குறைக்கலாம் என மருத்துவர் அளித்த ஆலோசனையே திருப்புமுனையாக அமைந்தது.

ஆரம்பத்தில், 3 கி.மீ தூரம் நடைபயிற்சி துவங்கினேன். அதன்பின், காலை 6 கி.மீ, மாலை 6 கி.மீ என நாளொன்றுக்கு, 12 கி.மீ வரை நடைப்பயிற்சி செய்தேன். நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது, சமூக வலைத்தளப் பயன்பாட்டைக் குறைத்து 7 மணி நேரம் தூங்குவது போன்ற பழக்கங்களையும் பின்பற்றினேன்.

பின்னோக்கி நடக்கும்போது மொட்டை மாடி போன்ற பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான சமதளமான நிலப்பரப்பை தேர்ந்தெடுத்தேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us