/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் தொடரும் தெருநாய்கள் தொல்லை நர்சை கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை

ADDED : மே 20, 2025 11:04 PM
குன்னுார்,; குன்னுாரில் தெரு நாய்கள் குழந்தைகள் உட்பட நடந்து செல்வோரை கடித்து வருவது அதிகரித்து வரும் நிலையில், நேற்று நர்ஸ் ஒருவரை கடித்ததால் அச்சம் அதிகரித்துள்ளது.
குன்னுாரில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. டென்ட்ஹில் பகுதியில், தெரு நாய்கள் அதிகமாக உள்ள நிலையில், விளையாடும் குழந்தைகளை விரட்டி கடித்து வருகிறது.
அதில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை கடித்ததில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒசட்டி மாரிமுத்து தெரு பகுதியில் நடந்து சென்ற நர்ஸ்நான்சி,42, என்பவரை தெருநாய் கடித்தது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 'வெறிநாய் கடியாக இருக்கலாம்,' என்ற சந்தேகத்தில் பாஸ்டியர் நிறுவன மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதே போல சந்திரா காலனி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவரை, நாய்கள் விரட்டியதில், கீழே விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பரசுராம் தெரு, உமரி காட்டேஜ்,வண்ணாரபேட்டை, உழவர் சந்தை, ஒசட்டி, அருவங்காடு உட்பட பல இடங்களிலும் சுற்றித் திரியும் தெருநாய்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தெரு நாய்களை கொல்ல கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், இவை கூட்டமாக சென்றும் குழந்தைகளை கடிக்கிறது, இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகிறது. எனவே, தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.