ADDED : அக் 08, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி படகு இல்லம் சாலையில், 15 தெருவிளக்குகள் உள்ளன.
கடந்த சில வாரங்களாக, பல விளக்குகள் எரியாத காரணத்தால், இரவில் சுற்றுலா பயணிகள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் உள்ள குழிகளில் தடுமாறி விழும் ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த சாலையில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

