/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதார சீர்கேடுக்கு வழிவகுத்தால் கடும் நடவடிக்கை; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

ADDED : நவ 28, 2025 04:37 AM

ஊட்டி: 'ஊட்டி நகரில் வார்டு பகுதிகளில் கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடுக்கு வழிவகுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். நகரில் வீடு, ஓட்டல்களில் வெளியேற்றப்படும் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் தரம் பிரித்து வாங்கி செல்கின்றனர்.
'குப்பைகளை கண்ட இடங்களில் கொட்ட கூடாது, தினமும் வீடு தேடி வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும்,' என, நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சில வார்டுகளில் மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டுகின்றனர். மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'வார்டு பகுதிகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்ட கூடாது; வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களுக்கு தரம் பிரித்து வழங்க வேண்டும் என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி சில வார்டுகளில் கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.