/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படகு இல்ல ஏரியில் கடும் துர்நாற்றம்; உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ADDED : அக் 28, 2024 11:25 PM

ஊட்டி : ஊட்டி படகு இல்ல ஏரியில் வீசும் கடும் துர்நாற்றத்தால் சுற்றுலா பயணியர் அவதி அடைந்துள்ளனர்.
ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்கள் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்கின்றனர்.
பிற நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்ய வருகை தருகின்றனர். ஏரி அருகே ஓட்டல்கள், விடுதிகள், பங்களாக்கள் ஆங்காங்கே உள்ளது. அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் அவ்வப்போது ஏரியில் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக படகு இல்ல ஏரி நீரில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், ஏரியில் படகு சவாரி செய்பவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
படகு சவாரிக்கு வரும் பல சுற்றுலா பயணியர் துர்நாற்றத்தால் படகு சவாரியை தவிர்த்து வெளியேறுகின்றனர்.
துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நகராட்சியும்; படகு இல்ல நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.
நகராட்சி சுகாதார அலுவலர் சிபி கூறுகையில்,''படகு இல்ல ஏரியில் ஆய்வு நடத்தி விதிமீறி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.