தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 20, 2024 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 09:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார் : பந்தலுார் அருகே பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி துவக்கி வைத்து, 'அரசு பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி உதவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்து விளக்கம் அளித்ததுடன், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன் வர வேண்டும்,' என்றனர்.

தொடர்ந்து, மாணவர்கள் மேள வாத்தியங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்கள் எழுப்பிய படி ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்தில் ஆசிரியர் பயிற்சினர் பால்துரை, ஆசிரியர்கள் கோவிந்தராஜ், ஆனந்தகுமார், ஜெயலட்சுமி, சகுந்தலா, ரஜினி, மேலாண்மை குழு உறுப்பினர் செபஸ்டியான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, அரசு பள்ளியில் தங்கள் வீட்டு குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us