UPDATED : மே 11, 2026 09:33 PM
ADDED : மே 11, 2026 09:31 PM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு சாத்திபுரம் பேச்சியம்மன் நகரை சேர்ந்த மனோஜ் - -அனு தம்பதியினரின் மகன் ஆதர்ஷ், 13. இவர், ரயில்வே காலனி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கோடை விடுமுறை என்பதால், ஆதர்ஷ் நேற்று காலை தனது மாமா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் கல்பாத்தி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
கல்பாத்தி கோவில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, ஆதர்ஷ் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்களும், பொதுமக்களும் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தீவிர தேடுதல் நடத்தி சிறுவனை மீட்டனர்.
பாலக்காட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, ஆதர்ஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
