/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்கள் தங்கும் விடுதி; புகார் பெட்டி வைக்க உத்தரவு
/
மாணவர்கள் தங்கும் விடுதி; புகார் பெட்டி வைக்க உத்தரவு
மாணவர்கள் தங்கும் விடுதி; புகார் பெட்டி வைக்க உத்தரவு
மாணவர்கள் தங்கும் விடுதி; புகார் பெட்டி வைக்க உத்தரவு
ADDED : அக் 03, 2024 11:49 PM
ஊட்டி : ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மாணவர் விடுதியில், புகார் பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் தங்கும் விடுதியில், அடிப்படை வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் இருப்புகள், மாணவர்களின் பதிவேடுகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா, நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், 'மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில், விடுதியின் முகப்பில் புகார் பெட்டி வைக்கவும், விடுதியை அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தி வரும் கடைகள் மூலம், சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் நர்சரி செடிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நாள்தோறும் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் குறித்து ஆய்வு செய்தார். அதில், நீலகிரி தைலம், மசாலா பொருட்கள், தேன், ஸ்வெட்டர்கள் மற்றும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, விலை மற்றும் விற்பனை விபரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், ஊட்டி படகு இல்லத்தில் சாகச விளையாட்டு இடங்களையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் கவுசிக், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.