/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர் மாயமான சம்பவம்; மழையால் தேடும் பணி நிறுத்தம்
/
மாணவர் மாயமான சம்பவம்; மழையால் தேடும் பணி நிறுத்தம்
மாணவர் மாயமான சம்பவம்; மழையால் தேடும் பணி நிறுத்தம்
மாணவர் மாயமான சம்பவம்; மழையால் தேடும் பணி நிறுத்தம்
ADDED : செப் 19, 2025 08:34 PM
குன்னுார்; குன்னுாரில் சூசைட் பாயின்ட் பகுதியில், மாயமான மாணவரை, 3வது நாளாக தேடிய போது, கன மழை நீடித்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த அபு முகமது என்பவரின் மகன் தனியார் ஓட்டலில் பணியாற்றியதுடன், குன்னுார் கல்லுாரி வாயிலாக அஞ்சல் வழியில் பி.எஸ்.சி., படிப்பை தொடர்ந்தார்.
இந்நிலையில், கடந்த, 17ல், 'சூசைட்ராக்' பகுதியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி சென்றுள்ளார். அப்பர் குன்னுார் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். டைகர்ஹில் பகுதியில் உள்ள பாறை அருகே இவரின் பேக் கிடைத்ததன் பேரில், தேடுதல் பணி நடந்து வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று, டிரோன் இயக்கி அந்த பகுதிகளில், போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், உறவினர்கள், நக்சல் தடுப்பு பிரிவினர், தன்னார்வலர்கள் தேடினர். மாலை, 3:00 மணியில் இருந்து கன மழை நீடித்ததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடும் பணி நடக்க உள்ளது.