/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: மூன்று பேர் கைது
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: மூன்று பேர் கைது
ADDED : நவ 21, 2024 07:03 AM

ஊட்டி; ஊட்டியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கிராமத்தில், வெளியூர் தம்பதி தங்கி கடந்த சில ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, 16 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த, 10ம் தேதி மாணவி தோழிகளை பார்க்க செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 13ம் தேதி மாணவி வீட்டுக்கு வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 'முகநுாலில் அறிமுகமான நபர் ஒருவர், மாணவியை மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்,' என, தெரியவந்தது. மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின், ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் விசாரணை நடந்தது. அதில், மாணவியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி, சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் கூறுகையில்,''மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஹரீஷ்,22, பிரவீன்,22, பிரேம்குமார்,24, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.