தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ களிமண் பொம்மை தயாரித்து அசத்தல்: மாநில போட்டிக்கு மாணவன் தேர்வு

 களிமண் பொம்மை தயாரித்து அசத்தல்: மாநில போட்டிக்கு மாணவன் தேர்வு

 களிமண் பொம்மை தயாரித்து அசத்தல்: மாநில போட்டிக்கு மாணவன் தேர்வு


ADDED : டிச 01, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: - தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், களிமண் பொம்மைகள் தயாரித்தல் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டு தோறும் கலைத் திருவிழா போட்டிகள்,பள்ளிகள், குறுவள மையம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு, தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 பயிலும் மாணவன் கவுதம், களிமண் பொம்மைகள் தயாரிக்கும் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சாதித்த மாணவனுக்கு, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமையில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us