/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவி பாலியல் வன்கொடுமை: பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
மாணவி பாலியல் வன்கொடுமை: பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் வன்கொடுமை: பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் வன்கொடுமை: பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2025 10:59 PM

ஊட்டி: -ஊட்டியில் பா.ஜ., மகளிரணி சார்பில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்தும் தி.மு.க., அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ., மாவட்ட மகளிர் அணி தலைவர் கல்பனா தேவி தலைமை வகித்தார். மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 'கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளானதற்கும், தி.மு.க., அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் அனிதா கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தருமன், முன்னாள் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நகர தலைவர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.