/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்; ஓவிய கண்காட்சியில் மாணவர்கள் வியப்பு
/
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்; ஓவிய கண்காட்சியில் மாணவர்கள் வியப்பு
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்; ஓவிய கண்காட்சியில் மாணவர்கள் வியப்பு
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்; ஓவிய கண்காட்சியில் மாணவர்கள் வியப்பு
ADDED : பிப் 18, 2025 09:43 PM
கோத்தகிரி ; கோத்தகிரி தெங்குமரஹாடா அரசு பள்ளியில், இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்ற தலைப்பில், ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தெங்குமர ஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வழியாக சென்று வர வேண்டும்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி பாடத்தை தவிர, மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளி கொண்டு வரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 'ஈரநிலம்,ஆதிநிலம்' அமைப்புகள் சார்பில், 'இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்' என்ற தலைப்பில், ஓவிய ஆசிரியர் தமிழரசன் படைப்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவிய கண்காட்சியை நடத்தின.
இதில், அரிய வகை பறவைகள், விலங்குகள், பூச்சி இனங்கள் உட்பட, சூழல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை மாணவர்கள் கண்டுக்களித்தனர்.
மேலும், 'உலக அளவில் இயற்கையை காப்பதன் அவசியம்; சூழலியலுக்கு ஏற்ற பல்லுயிர்களின் பணிகள்; மனிதர்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் உயிரினங்கள்; காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றல் ஏற்படும் தீமைகள்,' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, 'உயிர் சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது,' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆசிரியை சீதா மயிலா வரவேற்றார். ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியை வினோதினி வழிகாட்டுதல் படி, ஆதிநிலம் அறக்கட்டளை சேர்ந்த வீரப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

