/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பூமியை காக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள்'- சுற்றுச்சூழல் நிகழ்வில் தகவல்
/
'பூமியை காக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள்'- சுற்றுச்சூழல் நிகழ்வில் தகவல்
'பூமியை காக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள்'- சுற்றுச்சூழல் நிகழ்வில் தகவல்
'பூமியை காக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள்'- சுற்றுச்சூழல் நிகழ்வில் தகவல்
ADDED : நவ 27, 2024 09:00 PM
கோத்தகிரி; 'இந்த பூமியை காக்க நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள, காலநிலை மாற்றத்தை மீட்டு எடுத்தல் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி விஸ்வசாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
இன்றைய கால கட்டத்தில் உலகை ஆண்டு வரும் முதலாளித்துவ உற்பத்தி முறை, இயற்கையை அழிக்கும் தன்மை கொண்டது.
ஒருபுறம் செல்வங்கள் குவிந்து வருவதும், மறுபுறம் துயரங்கள் வளர்ந்து வருவதும் நவீன பொருளாதார கொள்கையின் விளைவாக உள்ளது. இதன் பாதிப்பு தான், காலநிலை மாற்றம்.
அனைத்து நாடுகளும் பொருளாதார மேம்பாடு என்ற கொள்கையை முக்கியத்துவமாக பின்பற்றி வருகின்றன. இயற்கையை சுரண்டாமல் இத்தகைய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை.மேலை நாடுகளை போல ஆடம்பரமாக வாழ நினைத்தால், நமக்கு ஒரு பூமி போதாது. ஒன்பது பூமிகள் வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல, இந்த பூமியை காக்க நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை மாணவர்கள் தான். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர்.