/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
/
அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
ADDED : நவ 14, 2025 09:12 PM

பந்தலுார்: பந்தலுார் 'டியூஸ் மெட்ரிக்' பள்ளியில், அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பந்தலுார் டியூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், டியூஸ் எக்ஸ்போ மற்றும் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில், முதல்வர் சுசீந்திரநாத் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் உஜ்வல்தீப் தலைமை வகித்து பேசுகையில், ''படிக்கும் வயதில் பள்ளி பாடங்களை மட்டுமே படிக்காமல், படித்த பாடங்களை வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளை, எவ்வாறு உருவாக்குவது என்பதை மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமாக செய்து காட்டவே இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது,'' என்றார்.
பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். கண்காட்சியில் பாம்பன் பாலம் திறக்கும் காட்சி, ஜே.சி.பி., செயல்படும் விதம், ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட, 100 க்கும் மேற்பட்ட, படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அறிவியல் படைப்புகளை உருவாக்கி, அதன் செயல்முறைகளை விளக்கிய மாணவர்களை, அனைவரும் பாராட்டினர். பி.டி.ஏ., தலைவர் எபினேசர் நன்றி கூறினார்.

