தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அறிவியல் -கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

 அறிவியல் -கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

 அறிவியல் -கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்


ADDED : மார் 03, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: தேசிய அறிவியல் தின கண்காட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வைத்து அசத்தினர்.

பந்தலுார் அருகே தேவாலா ஹட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் தரிசனதேவி முன்னிலை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்களின் பல்வேறு, அறிவியல் படைப்புகளை ஆசிரியர்கள் உதவியுடன் தயாரித்து, காட்சிக்கு வைத்தனர்.

கண்காட்சியில் பங்கேற்ற பெற்றோர் மற்றும் பார்வையாளர்களுக்கு, தங்களின் படைப்புகள் செயல்படும் விதங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, அறிவியல் தினத்திற்கு மூல காரணமான, சர் சி.வி.,ராமன் முகமூடி அணிந்து, 'எதிர்காலத்தில் ராமனின் கனவுகளை மெய்ப்பிக்க, தங்களால் இயன்ற அளவு அறிவியல் படைப்புகளை உருவாக்குவோம்,' என, உறுதிமொழி எடுத்தனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தலைமையில், அறிவியல் இயக்க தேவாலா கிளைத்தலைவர் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வானவில் மன்ற ஆசிரியர் ஷாலினி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us