தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

 கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

 கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்


ADDED : நவ 27, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை பள்ளி ஆண்டு விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் அசத்தினர்.

கூடலுார் தேவர்சோலை ஹோலிகிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின், 42வது ஆண்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. மேலாளர் வீவா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பப்பச்சன் தலைமை வகித்தார்.

விழாவில், கேரள மாநிலம் கோழிக்கோடு ஹோலிகிராஸ் கல்லுாரி முதல்வர் ஷைனிஜார்ஜ், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.

தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் அசத்தினர்.

விழாவில் பி.டி.ஏ., தலைவர் சுதீஷ்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை பிரீடா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us