/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தாளூர் கல்லுாரி மாணவர்கள்
/
தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தாளூர் கல்லுாரி மாணவர்கள்
தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தாளூர் கல்லுாரி மாணவர்கள்
தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தாளூர் கல்லுாரி மாணவர்கள்
ADDED : அக் 01, 2024 10:49 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே தாளூர் பகுதியில், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லுாரியில், 2023-24ம் ஆண்டுக்கான தேர்வில், மாணவர் கள், பஷ்னாபாத்திமா, நஷ்ரீன் பஷா, லட்சுமி பிரியா, மிண்ட்தாமஸ், சகானா ஜாஸ்மின், அஸ்வதி, ஆயிஷாஜினான், வந்தனா, அஷ்கினாபாத்திமா ஆகியோர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக, பல்கலைக்கழக அளவிலான தேர்வுகளில் மாணவர்கள் தங்க பதக்கங்களை பெற்று வருகின்றனர். இந்த கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி செயலாளர் ராஷித்கசாலி, பேராசிரியர் மோகன் பாபு, முதல்வர்(பொ) ரஞ்சித் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.