ADDED : ஏப் 21, 2025 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், சேதமடைந்த சாலையை மாணவர்கள் இணைந்து சீரமைத்தனர்.
பந்தலுார் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் இருந்து, பில்லுகடை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர முடியாத நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப், சிறு வயது விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் இணைந்து, சாலை ஓரத்தில் சிதறி கிடந்த கற்களை சேகரித்து, குழிகளில் நிரப்பி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.