/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அறிவார்ந்தவர்களாக மாணவர்கள் உயர வேண்டும்'
/
'அறிவார்ந்தவர்களாக மாணவர்கள் உயர வேண்டும்'
ADDED : அக் 28, 2025 11:54 PM

ஊட்டி: நீலகிரி மாவட்ட நிர்வாகம் பொது நுாலகத்துறை மற்றும் பப்பாசி சார்பில், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 4வது புத்தக திருவிழா நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட சமுக நல பாதுகாப்பு அலுவலர் பிரவீணா தேவி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வக்கீல் விஜயன் பேசுகையில், ''மனிதனின் வாழ்க்கை எப்பொழுதும் பதட்டமாக உள்ளது. மாணவர்கள் அனைத்தையும் கற்று அறிவார்ந்தவர்களாக உயர வேண்டும்.
தற்போது, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கைக்குள் வந்துள்ளது கைபேசி. நீங்கள் கற்றதும், கல்லாததும் உங்கள் கையில் உள்ளது. குழந்தைகள் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் சமமானவர்களாகவும், பலருக்கு உதவுபவராகவும் இருக்க வேண்டும்' என்றார்.
இதில், மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சி, கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆர்வத்துடன், புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
சமூக நலத்துறையை சேர்ந்த ஹெலன் வரவேற்றார். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

