/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மாணவர்கள் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சட்ட எழுத்தறிவு குழு விழாவில் அறிவுரை
/
'மாணவர்கள் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சட்ட எழுத்தறிவு குழு விழாவில் அறிவுரை
'மாணவர்கள் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சட்ட எழுத்தறிவு குழு விழாவில் அறிவுரை
'மாணவர்கள் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சட்ட எழுத்தறிவு குழு விழாவில் அறிவுரை
ADDED : ஜூலை 28, 2025 08:33 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 'சட்ட எழுத்தறிவு குழு' துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
மாணவி யாசினி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து, மாணவர்கள் பள்ளி பாடங்களுடன், சட்டங்களை தெரிந்து கொள்ள, இந்த குழுவை முழுமையாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.
குழுவின் பொறுப்பாளர் வக்கீல் ஷினுவர்கீஸ் பேசுகையில், ''தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும், இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் சட்டங்களை தெரிந்து கொள்வதுடன், எதிர்காலத்தில் தங்கள் சமுதாயத்தை காப்பாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ள இது ஒரு அடித்தளமாக அமையும்,''என்றார்.
வக்கீல் கணேசன் பேசுகையில், ''பள்ளி மாணவர்கள் மொபைல் போன்கள் பயன்பாடு மற்றும் தேவையற்ற போதை பழக்கங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதை தவிர்க்கவும், ஏழ்மை நிலையில் உள்ள, பெற்றோர் எதிர்காலத்தில் நலமுடன் வாழ படிப்பை முழுமையாக கற்று கொள்ளவும் முன் வர வேண்டும்,''என்றார்.
குழுவை துவக்கி வைத்து நீதிபதி பிரபாகரன் பேசுகையில்,''கிராமப்புற மக்கள் மத்தியில் நீதிமன்றம் என்றாலே ஒருவித, அச்சம் நிலவி வருகிறது. அந்த நிலை மாற வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை தரும் இடமாக நீதிமன்றம் உள்ளதுடன், எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கவும், அரசு மூலம் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை முழுமையாக கிடைக்க செய்வதற்கான வழி ஏற்படுத்தும் இடமாகவும் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் சட்ட எழுத்தறிவு குழு ஏற்படுத்தி உள்ளதன் மூலம், சட்டம் சார்ந்து தெரிந்து கொள்வதுடன், எதிர்காலத்தில் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளாக, தங்களை மாற்றி கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படும்,''என்றார்.
சட்டம் குறித்து எழுதிய மாணவிகள் மீனா, சத்திய ஸ்ரீ ஆகியோருக்கு நீதிபதி சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சப்----இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், வக்கீல்கள் சவுகத் அலி, ஜான்சன், மோகன்ராஜ், ஆசிரியர் கண்ணதாசன், நீதிமன்ற பணியாளர் ஷாலினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி மிதுனா நன்றி கூறினார்.