தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மானிய விலையில் மின் மோட்டார்

மானிய விலையில் மின் மோட்டார்

மானிய விலையில் மின் மோட்டார்


ADDED : செப் 14, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக, புதிய மின் மோட்டார்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டாரை வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மோட்டாரின் மொத்த தொகையில், 50 சதவீதம் அல்லது, 15,000 ரூபாய், பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

பழைய மின்மோட்டரை மாற்றி புதிய மின்மோட்டர் நிறுவுவதற்கு, ‘நடப்பு நிதியாண்டில் பொதுப் பிரிவினருக்கு, 15; ஆதி திராவிடர் பிரிவினருக்கு, 10; பழங்குடியின விவசாயிகளுக்கு, 2 எண்கள்,’ என, மொத்தம், 27 எண்கள் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊட்டி மற்றும் கூடலுார் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் நேரில் தொடர்பு கொண்டு, விண்ணப்பங்கள் கொடுத்து பயன்பெறலாம்.

மேலும் தொடர்புக்கு, 0423–2960300, 0423–2960257 மற்றும் 64262–296599 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us