/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மானிய விலையில் பண்ணை கருவிகள் மானிய விலையில்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு

ADDED : பிப் 08, 2024 05:20 AM

அன்னூர் : 'மானிய விலையில் பண்ணை கருவிகள் பெறலாம்,' என வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் முகாம் கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையத்தில் நேற்று நடந்தது.
முகாமில் விவசாயிகளிடமிருந்து பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமில் 12 துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும் கால்நடை பராமரிப்பு துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்கவில்லை.
நேற்று நடந்த முகாம் குறித்து நேற்று முன்தினம் மாலையில் தான் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தால் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று இருக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
முகாமில் உதவி வேளாண் அலுவலர் கவிதாஞ்சலி பேசுகையில், மண்வெட்டி, மண்சட்டி, களைகொத்து, கதிர் அரிவாள், கடப்பாரை ஆகிய கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கீதா பேசுகையில், உழவு செய்ய ஒரு எக்டேருக்கு, 5,400 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் ரேவதி பேசுகையில், மா, நெல்லி, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி ஆகிய ஐந்து பழ நாற்றுக்கள் 200 ரூபாய் மதிப்புள்ளது. 150 ரூபாய் மானியம் போக 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆதார் நகல் மற்றும் ஒரு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம், என்றார்.
நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.