/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மானியம்
/
நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மானியம்
நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மானியம்
நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மானியம்
ADDED : ஜூலை 06, 2025 10:36 PM
ஊட்டி; தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, இ- ஸ்கூட்டர் வாங்க, தலா, 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தில் மானியம் பெற, tnuwwb.tn.gov.in என்று இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு, ஊட்டி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423- 2448524 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.