/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
/
குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஏப் 03, 2025 08:35 PM

மேட்டுப்பாளையம்:
குன்னுாரில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலை இதமான கால நிலை நிலவி வந்தது.10:00 மணியளவில், குன்னுார், வெலிங்டன், அருவங்காடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அரை மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பஸ் ஸ்டாண்ட் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப்பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கு பின், கால நிலையில் மாற்றம் ஏற்பட்ட இதமான காலநிலை நிலவியது. சுற்றுலா மையங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து போட்டோ எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர்.