/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் வினியோகம் திடீர் நிறுத்தம்; போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ADDED : டிச 27, 2024 10:14 PM

பந்தலுார்; பந்தலுார் கொளப்பள்ளி பகுதியில் குடிநீர் வினியோகத்தை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தியதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில், 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில், 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.  'இந்த திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா, 2000 ரூபாய் வைப்பு தொகை ஊராட்சிக்கு செலுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் இதனை ஏற்று கொள்ளாத நிலையில், ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தை நிறுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று முன்தினம் மாலை கொளப்பள்ளி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில்,'தவணை முறையில் வைப்பு தொகையை ஊராட்சிக்கு செலுத்துவோம்; குடிநீர் வினியோகத்தை உடனடியாக வழங்க வேண்டும்,' என, கூறப்பட்டது. அதனை ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் ஏற்று கொண்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.