/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சல்லிவன் நினைவு பூங்கா கோடை விழாவுக்காக தயார்
/
சல்லிவன் நினைவு பூங்கா கோடை விழாவுக்காக தயார்
ADDED : ஏப் 29, 2025 09:04 PM

கோத்தகிரி; கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்கா, கோடை விழாவுக்காக தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கோடை விழாவில் முதல் நிகழ்வாக, கோத்தகிரி நேரு பூங்காவில், காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும், 3, 4ம் தேதிகளில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பங்கேற்று கண்காட்சியை கண்டுக்களிக்க உள்ளனர்.
நடப்பாண்டு, தோட்டக்கலை துறை மூலம், கன்னேரிமுக்கு ஜான் சல்லிவன் நினைவிடம் அருகே, நினைவு பூங்கா உருவாக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. குழந்தைகள் விளையாட ஏதுவாக, சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பூங்காவை, பொலிவுபடுத்தி வரும் கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நுழைவு கட்டணம், 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, விழா நாட்களில் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக, பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவை, போதிய அளவு விளம்பரப்படுத்தும் பட்சத்தில் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

