/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொலிவிழந்த சல்லிவன் பூங்கா; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
/
பொலிவிழந்த சல்லிவன் பூங்கா; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
பொலிவிழந்த சல்லிவன் பூங்கா; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
பொலிவிழந்த சல்லிவன் பூங்கா; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
ADDED : டிச 29, 2024 11:24 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள ஜான் சல்லிவன் பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவு இழந்து காணப்படுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் சாலையில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரா ஜான் சல்லிவன் நினைவாக பூங்கா, 'ஊட்டி-200' விழாவின் போது அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சி நிர்வாகம் பராமரிப்பில், குறைந்த பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவின் அழகை, தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் காண தவறுவதில்லை. அதற்கு ஏற்றார் போல், பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.
சமீப காலமாக, இப்பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல், செடிகள் ஆக்கிரமித்து, பொலிவு இழந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறுகையில்,''இந்த பூங்காவின் நிலை குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் அனுமதி அளித்தால், இந்த பூங்காவை மக்கள் உதவியுடன் சிறப்பாக பராமரிக்க ஆவண காப்பகம் தயாராக உள்ளது,'' என்றார்.