/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை விழா வாசனை பொருட்கள் கண்காட்சி நிறைவு
/
கோடை விழா வாசனை பொருட்கள் கண்காட்சி நிறைவு
ADDED : மே 11, 2025 11:44 PM

கூடலுார் ; கூடலுாரில் மூன்று நாட்கள் நடந்த கோடை விழா, வாசனை பொருட்கள் கண்காட்சி நிறைவு பெற்றது.
கூடலுார் மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில், 11வது கோடை விழா மற்றும் வாசன பொருட்கள் கண்காட்சி, 9ம் தேதி துவங்கியது. கண்காட்சியில், தோட்டக்கலை துறையினர் வாசனை பொருட்களை பயன்படுத்தி அமைத்து இருந்த, 'குன்னுார் ரயில்வே ஸ்டேஷன், இந்திய வரைபடம், ஜல்லிக்கட்டு காளை, வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பதப்படுத்த வனவிலங்குகள், கூடலுார் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கியிருந்த பிளாஸ்டிக் அரக்கன்,' உள்ளிட்டவைகள் மக்களை கவர்ந்தன.
இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. கூடலுார் சப்-கலெக்டர் சங்கீதா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்து பேசினார்.
கண்காட்சியில் முதல் மூன்று இடங்களை பெற்ற தோட்டக்கலைத்துறை, கூடலுார் நகராட்சி, வனத்துறைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.