/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை விழாக்கள் நிறைவு; மழையால் அழுகிய மலர்கள்
/
கோடை விழாக்கள் நிறைவு; மழையால் அழுகிய மலர்கள்
ADDED : ஜூன் 02, 2025 11:51 PM

குன்னூர்; நீலகிரியில், கோடை சீசனில், தோட்டக்கலை துறை சார்பில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டி, கூடலுாரில் வாசனை திரவிய கண்காட்சி, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழ கண் காட்சி நடந்தன. நிறைவாக, நேற்று காட்டேரி பூங்காவில், மலைப்பயிர்கள் கண்காட்சி நிறைவு பெற்றது.
நடப்பாண்டு கோடை விழாக்களில் பெரும்பாலும் மழையின் தாக்கம் அதிகரித்தது. 'ரெட் அலர்ட்' காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. சிம்ஸ் பார்க் உட்பட சுற்றுலா ஸ்தலங்களில், பூத்து குலுங்கிய மலர்கள் மழையினால் அழுகின. கூட்டம் குறைந்ததால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டுகளை போல அல்லாமல், நடப்பாண்டு மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சுற்றுலா பாதிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டுள்ளது,' என்றனர்.