கோடை சீசன் பூங்கா போட்டி :விண்ணப்ப படிவம் வினியோகம்
கோடை சீசன் பூங்கா போட்டி :விண்ணப்ப படிவம் வினியோகம்
ADDED : ஏப் 22, 2026 07:59 PM
ஊட்டி: நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே ஆகிய கோடை காலங்களில் நடத்தப்படும் கோடை விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, 128-வது மலர்கண்காட்சி ஊட்டியில் வரும் மே மாதம் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது.
இந்த மலர்கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பூங்கா போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள் ஊட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பூங்காக்களின் உரிமையாளர்கள் போட்டிக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் வரும், 26ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 29ம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் பதிவு ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் கட்டணத்துடன் செலுத்தப்பட வேண்டும். சிறந்த பூங்காக்களுக்கான தேர்வு செய்யும் குழு வரும், 30ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர், அலுவலகத்தை (72005 07195) அணுகலாம்.
