/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : மே 11, 2025 11:42 PM

ஊட்டி; ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் நடந்து வரும் கோடைகால முகாமில், 200 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள எச்.ஏ.டி.பி. , மைதானத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி பெற ஏற்ற கட்டமைப்புகள் உள்ளன.
தேசிய அளவில் பங்கேற்கும் வீரர்களும் ஊட்டியில் தங்கி இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று போட்டியில் பங்கேற்றுள்ளனர். தவிர, பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளும் நடக்கிறது. ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.
கோடைகால பயிற்சியில் ஆர்வம்
இந்த மைதானத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், தடகளம், பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கும் முகாமில் சிறந்த நடுவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இதில், கோடை கால விடுமுறையை வீணடிக்காமல், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 200 பேர் பங்கேற்றுள்ளன.
இதேபோல, காந்தள் கால்பந்து மைதானத்தில் சுபாஷ் விளையாட்டு சங்கம் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நடந்து வருகிறது. கால்பந்து வீரர்கள் மாசம், ராதாகிருஷ்ணன் பயிற்சி அளித்து வருகின்றனர். ஏற்பாடுகளை கிளப் நிர்வாகி சகாதேவன் செய்துள்ளார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கூறுகையில், '' எச்.டி.ஏ.பி., மைதானத்தில் பயிற்சி பெற வரும் வீரர்களுக்கு காலை மற்றும் மாலை என, இரண்டு மணி நேரம் நடுவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது, 200 பேர் கோடை கால பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி முகாம், 15ம் தேதி நிறைவு பெறும்,'' என்றார்.