/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவு அச்சத்தில் சூரல் மலை கிராம மக்கள்
/
நிலச்சரிவு அச்சத்தில் சூரல் மலை கிராம மக்கள்
ADDED : மே 27, 2025 07:51 PM

பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே சூரல் மலை உள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுத்த இந்த அழகிய கிராமத்தை ஒட்டிய புஞ்சிரிமட்டம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை, 30ல் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள், மரங்கள்புன்னம்புழா ஆற்றில் அடித்து வரப்பட்டது. அதில், குடியிருப்புகள் முழுமையாக இடிந்து குடியிருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர். அதில், 400 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பெரும்பாலான உடல்கள் மண்ணில் புதைந்துள்ளது.
இதனால், இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆற்றின் கரையோரங்கள் இருந்த குடியிருப்புகள் காலி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட புஞ்சிரிமட்டம் வனப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அருவிகள் ஊற்றெடுத்துள்ளதுடன், புன்னம்புழா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது, அந்த பகுதியில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், உள்ளூர் மக்கள் ஆற்றின் ஓரங்களில் நிற்பதற்கும், ஆற்று வெள்ளத்தை ரசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால், இந்த பகுதி மக்கள் கடந்த ஆண்டு போல நிலச்சரிவு ஏற்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.