/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இறைவனிடம் சரணாகதி; முக்திக்கு வழி'
/
'இறைவனிடம் சரணாகதி; முக்திக்கு வழி'
ADDED : மார் 19, 2024 11:35 PM

அன்னூர்;'பகவானிடம் சரணாகதி அடைவதே முக்திக்கு வழி' என பகவத் கீதை சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது.
ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், 'கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை' என்னும் சொற்பொழிவு நேற்று முன் தினம் நடந்தது.
கோவை 'இஸ்கான்' அமைப்பின் நிர்வாகி, ஸ்ரீநிவாச ஹரி பிரபு பேசுகையில், தினமும் வாய்ப்புள்ள நேரங்களில், 'ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' நாமத்தை ஜெபிக்க வேண்டும். ஸ்ரீ சைதன்ய மகா பிரபு தனது முழுமையான பக்தியால் பகவானின் அவதாரமாகவே மாறினார். பகவான் நாம ஜபத்தால் அச்சம், கோபம், வெறுப்பு, ஆணவம், பகைமை ஆகிய குணங்கள் நம்மை விட்டு செல்லும். பகவானை சரணாகதி அடைய வேண்டும் என தொடர்ந்து வேண்டி அதை நோக்கிச் செல்வதே முக்திக்கு வழியாகும். பக்தி யோகத்தில் ஈடுபடுவதே நம்மை தீய எண்ணங்களில் இருந்து விலகி செல்ல வைக்கும். கிருஷ்ணர் நாமத்தை உச்சரிப்பதற்கே கொடுப்பினை வேண்டும், என்றார். கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டன. இஸ்கான் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் மது கோபால் தாஸ், ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

