/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிப்பு

ADDED : மார் 20, 2024 01:03 AM

கூடலுார்;கூடலுாரில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து, பறிமுதல் செய்யும் பணியில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட கூடலுார் பகுதி, தமிழக, கேரளா, கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள, 3 பறக்கும் படை வாகனங்களில், சோலார் மூலம் இயங்கக்கூடிய சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராகளின் வீடியோ பதிவுகளை கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்,' என்றனர்.