/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் தற்காலிக கடைகள் அமைக்க அளவீடு பணி
/
குன்னுாரில் தற்காலிக கடைகள் அமைக்க அளவீடு பணி
ADDED : டிச 03, 2024 05:55 AM

குன்னுார்; குன்னுாரில் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் பணிக்காக, தற்காலிகமாக கடைகள் அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்தது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 800 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்க்கிங் வசதியுடன், 678 கடைகள் கட்டும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, விநாயகர் கோவில் அருகே இந்து அறநிலையதுறை சொந்தமான இடத்தில், கடைகள் அமைக்க ஐகோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு துறையின் இடம்; குப்பைகளில் உரம் தயாரித்த உழவர் சந்தை அருகே உள்ள இடம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீயணைப்பு நிலையத்தின் ஆற்றோர இடம், அம்மா மருந்தகம் அருகே உள்ள பார்க்கிங் தளம், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் நேற்று அளவீடு பணிகளில் நகராட்சி துறையினர் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நகரின் சில இடங்களில் கடைகள் அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ளது. எந்த இடங்களில் தற்காலிக கடைகள் அமைப்பது என்பது பிறகு தெரிவிக்கப்படும்,' என்றனர்.