/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலை விரிவாக்க பணி நிறுத்தம்; தொடரும் விபத்துகளால் பாதிப்பு
/
நெடுஞ்சாலை விரிவாக்க பணி நிறுத்தம்; தொடரும் விபத்துகளால் பாதிப்பு
நெடுஞ்சாலை விரிவாக்க பணி நிறுத்தம்; தொடரும் விபத்துகளால் பாதிப்பு
நெடுஞ்சாலை விரிவாக்க பணி நிறுத்தம்; தொடரும் விபத்துகளால் பாதிப்பு
ADDED : நவ 15, 2024 09:26 PM
குன்னுார் ; 'குன்னுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மீண்டும் துவக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி --குன்னுார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சமீபத்தில் பெய்த மழையால் சில இடங்களில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டதுடன், செடிகளுடன் புதர்களும் விழுந்துள்ளன. இவற்றை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், பிளாக்பிரிட்ஜ் உட்பட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் அகற்றவில்லை.
இதேபோல, அருவங்காடு முதல் பாய்ஸ்கம்பெனி வரையில் விரிவாக்கத்தின் போது, ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு தார் கலவையிடாமல் பணிகள் பாதியில் விடப்பட்டதால் மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில், ''கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையினால், அருவங்காடு -பாய்ஸ் கம்பெனி வரையில், 3 அடி ஆழத்திற்கு சாலையில், ஆங்காங்கே குழி ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
ஊட்டிக்கு செல்லும் முக்கிய சுற்றுலா வழித்தடமாக உள்ள இந்த சாலையில், தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, தகவல் தொடர்பு இணை அமைச்சர் முருகன், மாநில முதல்வர், மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது,''என்றார்.