/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஸ்வச்தா ஹி சேவா' விழிப்புணர்வு நிகழ்ச்சி குப்பையை தரம் பிரித்து வழங்க அறிவுரை

ADDED : அக் 02, 2025 09:35 PM

குன்னுார்:குன்னுார் நகராட்சி சார்பில் வார்டுகள் தோறும் நடந்து வரும், 'ஸ்வச்தா ஹி சேவா' நிகழ்ச்சியில், குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் துாய்மையை காக்க, மத்திய அரசின் ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் நகராட்சி சார்பில் வார்டு தோறும் குப்பைகள் தரம் பிரித்தல் விழிப்புணர்வு ஒவ்வொரு வார்டுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் சரவணன், ஆய்வாளர் சித்தநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் தண்டபாணி ஆகியோர் மேற்பார்வையில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரப்புரை மேற்பார்வையாளர்கள், 'செல்சி பிரைட், சவுந்தரியா மற்றும் பரப்புரையாளர்கள் ஜெயந்தி, வித்யா, இந்திரா, கவின் ராஜ், அருண் ஆகியோர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், 'பொம்மைகள், துணி வகைகள், அட்டைகள், காலணிகள்' என, தனித்தனியாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண் டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.