பேச்சு வார்த்தையில் உடன்பாடு: 'டாஸ்மாக்' மது கடைகள் திறப்பு
பேச்சு வார்த்தையில் உடன்பாடு: 'டாஸ்மாக்' மது கடைகள் திறப்பு
UPDATED : ஆக 18, 2026 05:55 PM
ADDED : ஆக 18, 2026 05:52 PM
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது ஊழியர்களின் போராட்டத்தால் மூடப்பட்ட கடைகள், 4 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால், மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த, 14 முதல் நேற்று வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாள்தோறும், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை பாதித்ததுடன், மது பிரியர்கள் மேட்டுப்பாளையம் உட்பட சமவெளி பகுதிகளுக்கு சென்று வாங்கினர். பார்களில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. இந்நிலையில், குன்னுாரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், 'காலை, 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கடை திறப்பது; காலி பாட்டில்கள் தனியாக எடுப்பது,' உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மற்ற கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதனால், தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், நேற்று வழக்கம் போல பகல், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
