/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாலுகா அலுவலக வளாகம் தெரு நாய்கள் அதிகரிப்பு
/
தாலுகா அலுவலக வளாகம் தெரு நாய்கள் அதிகரிப்பு
ADDED : அக் 08, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு, வருவாய் சம்பந்தமான தேவைகளுக்கு நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தரைத்தளத்தில் கோர்ட் அமைந்துள்ள நிலையில், வக்கீல்கள் மற்றும் வழக்கு சம்பந்தமான தேவைகளுக்கு வரும் மக்களின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக, அலுவலக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.