/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோட்ட ஆய அலுவலக பெயர் பலகையில் தமிழும் இடம்பெற்றது தினமலர் செய்தி எதிரொலி

ADDED : மே 13, 2025 10:47 PM

கூடலுார், ; கூடலுாரில், ஆங்கிலத்தில் மட்டும் இருந்த கோட்ட ஆய அலுவலகம் பெயர் பலகை, தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அனைத்து துறை செயலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஏற்கனவே உள்ள உத்தரவுகளை பின்பற்றி, அனைத்து அரசாணைகள் சுற்றாணைகள் தமிழில் வெளியிட வேண்டும்.
அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டும் கையொப்பமிட வேண்டும். பெயர் பலகைகளில் தமிழிலும் பெயர் இடம் பெற வேண்டும்,'என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கூடலுாரில் செயல்பட்டு வரும் கோட்ட ஆய அலுவலகம் பெயர் பலகையில், தமிழை தவிர்த்து, ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.