/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக அரசின் உத்தரவு அறிவிப்போடு முடங்கியது:பத்திரப்பதிவு செய்ய மக்கள் திண்டாட்டம்
/
தமிழக அரசின் உத்தரவு அறிவிப்போடு முடங்கியது:பத்திரப்பதிவு செய்ய மக்கள் திண்டாட்டம்
தமிழக அரசின் உத்தரவு அறிவிப்போடு முடங்கியது:பத்திரப்பதிவு செய்ய மக்கள் திண்டாட்டம்
தமிழக அரசின் உத்தரவு அறிவிப்போடு முடங்கியது:பத்திரப்பதிவு செய்ய மக்கள் திண்டாட்டம்
ADDED : மார் 14, 2024 11:17 PM

அன்னுார்;சார் பதிவாளர் அலுவலக எல்லை மறு சீரமைப்பு மற்றும் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைப்பது குறித்த தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றரை ஆண்டாகியும், அமல்படுத்தப்படாததால், பத்திரப்பதிவு செய்யும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில், பத்திரப்பதிவுத்துறை வாயிலாக, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
எல்லை மறுசீரமைப்பு
இந்நிலையில், பொது மக்கள் அலைச்சலை போக்க, பத்திரப்பதிவு அலுவலக எல்லையை மறு சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு எல்லை மறு சீரமைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2022 ஏப்., 30ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதன்படி புதிதாக சார் பதிவாளர் அலுவலகங்கள், அமைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இதுகுறித்து பொதுமக்களும் பத்திர எழுத்தர்களும் கூறியதாவது :
தற்போது அன்னுார் தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களில், வடவள்ளி மற்றும் பொகலூர் ஊராட்சி மக்கள் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் செல்கின்றனர். ஆம்போதி, கணுவக்கரை ஊராட்சி மக்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
கீரணத்தம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் பெரிய நாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் செல்கின்றனர். சூலூர் தாலுகா பதுவம்பள்ளி, காடுவெட்டி பாளையம் ஊராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி மக்கள் அன்னுார் தாலுகாவுக்கு வருகின்றனர்.
கடும் சிரமம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகாவைச் சேர்ந்த பொங்கலூர் ஊராட்சி மக்கள் பத்திர பதிவு செய்ய, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னுார் வர வேண்டும். இதனால் மக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள வருவாய் கிராமங்கள் அந்தந்த தாலுகாவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலேயே பத்திர பதிவு செய்யும்படி மறுசீரமைப்பு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது.
இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கும் அலைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். அரசு அறிவித்து ஒன்றரை ஆண்டு ஆகியும் அமல்படுத்தாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். விரைவில் அரசு சார் பதிவாளர் அலுவலக எல்லை மறுசீரமைப்பு அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்றனர்.

