/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 400 ஓட்டுக்கள் இலக்கு! பா.ஜ., ஊழியர் கூட்டத்தில் அறிவுரை
/
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 400 ஓட்டுக்கள் இலக்கு! பா.ஜ., ஊழியர் கூட்டத்தில் அறிவுரை
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 400 ஓட்டுக்கள் இலக்கு! பா.ஜ., ஊழியர் கூட்டத்தில் அறிவுரை
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 400 ஓட்டுக்கள் இலக்கு! பா.ஜ., ஊழியர் கூட்டத்தில் அறிவுரை
ADDED : பிப் 22, 2024 11:29 PM

அன்னுார்;'ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 400 ஓட்டுக்கள் எனும் இலக்குடன் செயல்பட வேண்டும்' என, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பா.ஜ., அன்னுார் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பேசியதாவது:
பொறுப்பாளர்கள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதியிலும், கவுரவ நிதி பெறும் விவசாயிகள், இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றோர், பிரதம மந்திரியின் ஆரோக்கிய காப்பீடு திட்டத்தில் பயன் பெற்றோர், சாலையோர வியாபாரிகள் திட்டத்தில் கடன் பெற்றோர், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆகியோர் பட்டியலை சேகரித்து, பயனாளிகளை சந்திக்க வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
தற்போது தலைமை வகுத்துக் கொடுத்துள்ள திட்டம், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறையாகும். 30 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்க வேண்டும். இப்படி பணியாற்றினால் உறுதியாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 400 ஓட்டுகள் நாம் பெறுவது நிச்சயம்.
உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும், 100 சதவீதம் இடங்களை பா.ஜ., வெல்லும் என தெரியவந்துள்ளது, கொங்கு மண்டலத்தில் கிடைக்கும் வரி வருவாய், ஒட்டுமொத்த தமிழகத்தின் வருவாயில் 55 சதவீதம் ஆகும். கொங்கு மண்டலம் நமது கோட்டையாக உள்ளது. இந்த தேர்தலில் அதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி பேசும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை, அனைத்து ஓட்டுச்சாவடி பகுதியிலும், ஓரிடத்தில் மக்களை திரட்டி அதை கேட்க செய்ய வேண்டும்.
வரும் 27ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பல்லடம் நிகழ்ச்சியில், அன்னுார் வட்டாரத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்பது; அதிகமாக உறுப்பினர் சேர்ப்பது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஐந்து இடங்களில் சின்னங்கள் வரைவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, மூத்த நிர்வாகி வெள்ளிங்கிரி உள்பட பலர் பங்கேற்றனர்.