/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காபி உற்பத்தியை 7- லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு; தேசிய காபி தின நிகழ்ச்சியில் தகவல்
/
காபி உற்பத்தியை 7- லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு; தேசிய காபி தின நிகழ்ச்சியில் தகவல்
காபி உற்பத்தியை 7- லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு; தேசிய காபி தின நிகழ்ச்சியில் தகவல்
காபி உற்பத்தியை 7- லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு; தேசிய காபி தின நிகழ்ச்சியில் தகவல்
ADDED : அக் 09, 2025 11:47 PM

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தேசிய காபி தின நிகழ்ச்சி நடந்தது.
கேரள மாநிலம் வயநாடு வெள்ளமுண்டா என்ற இடத்தில் காபி வாரியம் மற்றும் வயநாடு காபி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தேசிய காபி தின நிகழ்ச்சி நடந்தது. வயநாடு துணை கலெக்டர் அர்ச்சனா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தமிழகம் மற்றும் கேரளா மாநில காபி வாரிய இணை இயக்குனர் டாக்டர் கருத்தமணி தலைமை வகித்து பேசியதாவது:
கேரளாவில் விளையும் 'ரொபஸ்டா' வகை காபி துாள் உலக அளவில் தரம் வாய்ந்த காபியாக உள்ளது. வயநாட்டில், 8 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 72 ஆயிரம் குடும்பங்கள் விவசாயிகளாக உள்ளனர். இவர்களில், 2.5 லட்சம் விவசாய குடும்ப உறுப்பினர்கள் உள்ள நிலையில், தினசரி, 3- காபி குடித்தால் கூட வயநாடு பகுதியில், காபியின் தேவை அதிகரிக்கும். ஆனால், அந்த நிலை இல்லை. அதனை மாற்ற விவசாயிகள் முன் வரவேண்டும்.
தற்போது இந்தியாவில், 3.5 லட்சம் டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யும் நிலையில், வரும், 2047ல் இதனை, 7 லட்சம் டன் ஆக உயர்த்த காபி வாரியம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையை எட்ட, காபி விவசாயத்தை அதிகரிக்க முடியாத நிலை இருந்தாலும், இருக்கும் செடிகளில் காபி வாரியத்தின் ஆலோசனையுடன், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வருவது அவசியமாகும்.
நாகாலாந்து போன்ற மாநிலங்களில், 70 சதவீதம் வனமாகவும், 30 சதவீதம் விவசாய நிலமாகவும் உள்ள நிலையில், அங்கு காபி விவசாயம் நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, காபி வாரிய உறுப்பினர்கள் மனோஜ் குமார், உன்னிகிருஷ்ணன், தேயிலை வாரிய உறுப்பினர் சிவதாசன், வயநாடு காபி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் அருண், அலிபிரான், மது போப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தரமான காபி உற்பத்தி செய்வது குறித்த, பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வயநாடு மற்றும் நீலகிரி காபி விவசாயிகள் பங்கேற்றனர்.