/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்திற்கு ரூ.2.96 கோடியில் தார் சாலை; செம்பக்கொல்லி பழங்குடியினர் மகிழ்ச்சி
/
கிராமத்திற்கு ரூ.2.96 கோடியில் தார் சாலை; செம்பக்கொல்லி பழங்குடியினர் மகிழ்ச்சி
கிராமத்திற்கு ரூ.2.96 கோடியில் தார் சாலை; செம்பக்கொல்லி பழங்குடியினர் மகிழ்ச்சி
கிராமத்திற்கு ரூ.2.96 கோடியில் தார் சாலை; செம்பக்கொல்லி பழங்குடியினர் மகிழ்ச்சி
ADDED : டிச 26, 2024 10:09 PM

கூடலுார்; கூடலுார் செம்பக்கொல்லி கிராமத்துக்கு, 2.96 கோடி ரூபாயில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட, செம்பக்கொல்லி கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் முதுமலை வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
போஸ்பாராவிலிருந்து, முதுமலை வன எல்லையை ஒட்டி கிராமத்துக்கு, 3.2 கி.மீ., மண் சாலை செல்கிறது. அதில், வாகனங்கள் இயக்க முடியாத நிலை இருப்பதால், கிராமமக்கள், போஸ்பாரா வரை நடந்து வந்து, தனியார் வாகனங்களில், வெளியிடங்களுக்கு வருகின்றனர்.
சாலையில், நடந்து வரும்போது யானைகள் விரட்டி, சிலர் காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வரும் வகையில், மண் சாலையை தார் சாலையாக மாற்ற, பல ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வந்தனர்.
இந்நிலையில், தார் சாலை அமைக்க, தமிழ்நாடு நகரபுற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 2.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.தொடர்ந்து, பூமி பூஜையுடன் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
நிகழ்ச்சியில், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, செயல் அலுவலர் பிரதீப்குமார், துணைத் தலைவர் யூனுஸ்பாபு கிராம மக்கள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'நீண்ட போராட்டத்திற்கு பின், தார் சாலை அமைக்கும் பணி துவங்கி இருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவிய மாநில அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,' என்றனர்.