ADDED : ஏப் 14, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பு- வெஸ்ட் பரூக் இடையே விதிகளை மீறிய பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்களை அழித்து, கட்டுமானங்கள் நடப்பதற்கு தடை உத்தரவுள்ளது. அதி முக்கியமான பணிகள் இருப்பின், சம்பந்தப்பட்ட, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் துறை அலுவலகங்கள் மற்றும் வனத்துறையிடம் இருந்து, அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது.
இந்நிலையில், முறையான அனுமதி பெறாமல், கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பு அருகே, செங்குத்தான பகுதியில், விதிகளை மீறி கட்டுமானத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் அரசு துறையினர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

